மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சஷி கபூரின் உடல், அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. கொட்டும் மழையிலும் பாலிவுட்டின் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
1970 - 80ம் ஆண்டுகளில் ஹிந்தி திரையுலகில் காதல் படங்களில் நடித்து கொடிகட்டி பறந்தவர் சஷி கபூர். 1938ல் பிறந்த இவர், 4 வயதில் திரையுலகில் நுழைந்தார். தர்மபுத்ரா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், தீவார், கபி கபி, நமக் ஹலால், காலா பதர், சத்யம் சிவம் சுந்தரம் உள்ளிட்ட காலத்தால் அழியாத 100-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சஷி கபூர், மும்பை, கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலமானார்.
பின்னர் அவரது உடல் மும்பையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஷாரூக்கான், சைப் அலிகான், அனில் கபூர், சஞ்சய் தத், நஸ்ருதீன் ஷா, ரன்பீர் கபூர், ரன்தீர் கபூர், ரிஷி கபூர் உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். பல பிரபலங்கள் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்தனர்.
பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
சஷி கபூருக்கு 2011-ம் ஆண்டு பத்ம பூஷண் விருதும், 2015-ம் ஆண்டு சினிமா உலகில் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.
சஷி கபூருக்கு குணால் கபூர், கரண் கபூர், சஞ்சனா கபூர் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.